Kanchana 3 Success
Kanchana 3 Success

Kanchana 3 Success : ராகவா லாரன்ஸின் நடிப்பு இயக்கத்தில் காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகம் அண்மையில் திரைக்கு வந்தது.

வழக்கமான அதே பாணி பழிவாங்கல் கதை என்றாலும் அதே பாணி நகைச்சுவை ப்ளஸ் திகிலை கலந்து சொன்ன விதத்தில் படம் பட்டையைக் கிளப்பி வருகிறது.

தமிழகம் முழுக்க 300-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான இப்படம் அனைத்து திரையரங்குகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக வசூலை அள்ளி வருகிறது.

இப்படம் ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்திருப்பதாக அண்மையில் அறிவித்துள்ளனர். இதன்மூலம் காஞ்சனா 2-விற்குப் பின் இரண்டாவது முறையாக லாரன்ஸ் படம் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.

தர்பார் பிஸி நேரத்திலும் பிரபல தமிழ் நடிகரை சந்தித்த ரஜினி -வைரலாகும் புகைப்படம்!

இந்நிலையில் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக சூப்பர்ஸ்டார் ரஜினியை சந்தித்து திரும்பியுள்ளார் லாரன்ஸ். அப்போது வேதிகாவும் அவருடன் சென்றுள்ளார்.

விஸ்வாசம், பேட்ட படங்களின் வசூலை முறியடித்த காஞ்சனா 3 – மாஸ் காட்டும் லாரன்ஸ்!

மும்பையில் தற்சமயம் தர்பார் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் ரஜினி, அப்போதும் நேரம் ஒதுக்கி லாரன்ஸை சந்தித்துள்ளார்.