Kanchana 3 Review

Kanchana 3 Review : ராகவா லாரன்ஸ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காஞ்சனா 3. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகியுள்ளது இந்த திரைப்படம்.

படத்தின் கதைக்களம் :

காஞ்சனா சீரிஸ் கதைகள் எப்படி இருக்கும் என்பது உங்கள் அனைவருக்குமே தெரிந்த ஒன்று. இந்த படத்திலும் அப்படி தான் தன்னுடைய தாத்தாவின் 60-ம் கல்யாணத்திற்காக குடும்பத்திற்கு செல்கின்றனர்.

ஒரு இடத்தில் சாப்பிடுவதற்காக இறங்குகின்றனர். அந்த இடத்தில் மரம் ஒன்றில் பேயை அறைந்து வைத்திருக்க லாரன்ஸ் தெரியாமல் அந்த ஆணியை புடுங்கி விடுகிறார்.

ஜெயித்ததா காஞ்சனா 3? – லைவ் ட்விட்டர் விமர்சனம்.!

இதனால் அந்த ராகவா லாரன்ஸை தொற்றி கொள்கிறது. அந்த பேய் அதன் பின் என்னவெல்லாம் செய்கிறது? அதன் ஆசை என்ன என்பது தான் இப்படத்தின் மீதி கதையும் களமும்.

படத்தை பற்றிய அலசல் :

இரண்டாம் பாகத்தில் காமெடியில் கொஞ்சம் கோட்டை விட்டிருந்த லாரன்ஸ் அந்த தவறை அறிந்து இந்த படத்தில் பூர்த்தி செய்துள்ளார்.

ஆக்ஷன், திரில்லர், எமோஷனல், காமெடி என எதற்கும் பஞ்சம் வைக்காமல் படம் முழுவதையும் பக்காவாக கொண்டு சென்றுள்ளார்.

கோவை சரளாவின் காமெடி படத்தின் ஹைலைட், வேதிகா, லாரன்ஸ் காம்பினேஷன் பக்காவாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. ஓவியாவின் நடிப்பும் கச்சிதம்.

இரண்டாம் பாகத்தை போல பேய் இருக்கா? இல்லையா என்பதை கண்டறியும் சோதனைகள் எல்லாம் சிரிப்புக்கு 100-க்கு 200 % கேரண்டி.

தமனின் இசை படத்தின் பின்னணி பலம். பாடல்களும் நம்மை அதிர வைக்கின்றன.

பங்களாவிற்கு பேய் காட்ட கேமராவை கொண்டு சென்றுள்ள காட்சிகள் எல்லாம் ஹை லைட். நிச்சயம் படத்தின் ஒளிப்பதிவை பாராட்டியே ஆக வேண்டும்.

தம்ப்ஸ் அப் :

1. லாரன்ஸ் நடிப்பு
2. த்ரில்லர்
3. இசை
4. படத்தை கொண்டு போன விதம்
5. காமெடி

தம்ப்ஸ் டவுன் :

1. பிளாஷ் பேக் காட்சிகளின் நேரத்தை மட்டும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

REVIEW OVERVIEW
காஞ்சனா 3 - விமர்சனம்.!
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
kanchana-3-reviewமொத்தத்தில் காஞ்சனா 3 ஆக்ஷன், திரில்லர், காமெடிக்கு பஞ்சமில்லாத பக்கா பேமிலி என்டர்டைன்மெண்ட். குடும்பத்துடன் பார்த்து ரசித்து கொண்டாட ஏற்ற படம்.