Kanchana 3

Kanchana 3 Release Date : ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த காஞ்சனா 3 படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர்களில் ஒருவர் ராகவா லாரன்ஸ்.

இவரது நடிப்பில் முனி முதல் காஞ்சனா 2 வரை 3 பாகங்களாக வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது காஞ்சனா 3 உருவாகியுள்ளது.

கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் ஜோதிகா – இயக்குனர் யார் தெரியுமா?

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரடக்சன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட் செலவில் தயாரித்து வருகிறது.

படத்தில் ராகவா லாரன்சுடன் சேர்ந்து வேதிகா, ஓவியா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

தற்போது சம்மர் ஸ்பெஷலாக ஏப்ரல் 19-ம் தேதி உலகம் முழுக்க இப்படம் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது நாடாளுமன்ற தேர்தல் முடிந்த மறு நாள் இந்த படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.