Kanchana 3 BoxOffice
Kanchana 3 BoxOffice

Kanchana 3 BoxOffice – ராகவா லாரன்ஸின் நடிப்பு இயக்கத்தில் காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகம் அண்மையில் திரைக்கு வந்தது.

வழக்கமான அதே பாணி பழிவாங்கல் கதை என்றாலும் அதே பாணி நகைச்சுவை ப்ளஸ் திகிலை கலந்து சொன்ன விதத்தில் படம் பட்டையைக் கிளப்பி வருகிறது.

தர்பார் டீமுக்கு டார்ச்சர் தரும் மும்பை வில்லன் – என்ன செய்ய போகிறார் முருகதாஸ்?

தமிழகம் முழுக்க 300-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான இப்படம் அனைத்து திரையரங்குகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக வசூலை அள்ளி வருகிறது.

முதல்நாளில் தமிழகத்தில் மட்டுமே 10 கோடிக்கு அதிகமாகவும் தெலுங்கில் 6 கோடி வரையிலும் இப்படம் வசூல் செய்து அசத்தியது.

இதைதொடர்ந்து முதல் வாரத்தில் இப்படம் தமிழகத்தில் மட்டும் 50 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

காஞ்சனா இந்தி ரீமேக்கில் இருந்து வெளிவந்த முதல் புகைப்படம் – வைரலாகும் புகைப்படம் உள்ளே!

இதுபோக இப்படத்தின் டப்பிங் பதிப்பும் வசூல் வேட்டை நடத்தி வருகிறதாம். அண்மையில் வெளியான அஜித்தின் விஸ்வாசம், ரஜினியின் பேட்ட படங்களின் தெலுங்கு பதிப்பை விட இப்படம் கூடுதலாக வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.