Kanaa Movie

Kanaa Movie :

தங்க தட்டில் வைத்து தாங்க வேண்டிய படம் கனா என பாராட்டியும் கொஞ்சம் வருத்தத்துடன் பிரபல நடிகரான சூரி படத்தை பார்த்த பின்பு ட்வீட்டை பதிவு செய்துள்ளார்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜ் காமராஜா இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்தியராஜ், இளவரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் நடித்திருந்த படம் கனா.

நேற்று ( டிசம்பர் 21 ) முதல் இப்படம் உலகம் முழுவதும் திரைக்கு வந்தது. படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சூரியும் ட்வீட் செய்துள்ளார். அந்த டீவீட்டில் இந்த படத்தில் என்னுடைய பங்கு துளியும் இல்லை என்பது வேதனை அளிப்பதாகவும் தமிழக மக்கள் தங்கத்தட்டில் வைத்து தாங்க வேண்டிய படம் எனவும் விமர்சனம் செய்துள்ளார்.

இதோ சூரியின் ட்வீட்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.