நடிகர் நாகேஷ் நினைவு நாளை முன்னிட்டு நடிகர் கமல் பகிர்ந்திருக்கும் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

இந்திய திரையுலகில் ரசிகர்கள் கொண்டாடும் உலக நாயகனாக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

நடிகர் நாகேஷின் நினைவு நாளை முன்னிட்டு… கமல் பகிர்ந்திருக்கும் உணர்ச்சிகரமான ட்வீட்.!

எப்போதும் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகர் கமல்ஹாசன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி ஜாம்பவானான நாகேஷ் நினைவு நாளை முன்னிட்டு இன்று உணர்ச்சிகரமான பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் நாகேஷின் நினைவு நாளை முன்னிட்டு… கமல் பகிர்ந்திருக்கும் உணர்ச்சிகரமான ட்வீட்.!

அதில் அவர், மகா கலைஞர் நாகேஷின் நினைவுநாள் இன்று. 50 ஆண்டு காலம் நீடித்த கலைப்பயணத்தில் 1000 படங்களுக்கு மேல் நடித்து நம்மை மகிழ்வித்தவர். எத்தனை புகழ்ந்தாலும் அவற்றை விஞ்சி நிற்கும் ஆகிருதி அவருடையது. என் கலை மரபணுவில் வாழும் குருவை வணங்குகிறேன். என்று குறிப்பிட்டு இருக்கிறார்.