தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக உலக நாயகன் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

KamalHaasan Tested Possitive With COVID-19 : இந்திய திரையுலகில் உலக நாயகனாக வலம் வருபவர் கமல்ஹாசன். தமிழ் சினிமாவின் பல்வேறு புதுமைகளை புகுத்திய பெருமை இவருக்கு உண்டு. தமிழ் சினிமாவின் தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற முன்னோடி என்று சொல்லலாம்.

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், சிஎஸ்கே அணிக்கு இன்று பாராட்டு விழா..

கமலுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.. அவரே வெளியிட்ட அதிர்ச்சிப் பதிவு

இவரது நடிப்பில் தற்போது இந்தியன் 2 விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. மேலும் சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதே சமயம் மக்கள் நீதி மையம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி அரசியலில் தீவிர பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

Dialogue-லாம் Double Meaning-ல பேசுறாரு – Sasikumar & Sathish Funny Speech 

கமலுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.. அவரே வெளியிட்ட அதிர்ச்சிப் பதிவு

சமீபத்தில் அமெரிக்கா சென்று வந்த இவர் தனக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது பதிவில் அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்துள்ளார்.