Indian 2

KamalHaasan Speech : இந்தியன் 2 படம் குறித்து கமல்ஹாசன் தன்னுடைய கருத்தை அதிரடியாக பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் மாபெரும் நடிகராக விளங்கி வருபவர் கமல்ஹாசன். இவர் தற்போது படங்கள், அரசியல் என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

தன்னுடைய இறுதி படமாக ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளார். கமலுக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அரசியலில் இறங்கி விட்டதால் இந்தியன் 2 படத்திலும் அரசியல் பற்றி பேசுவாரா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று விமான நிலையத்தில் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்த போது இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு கமல்ஹாசன் படத்தில் நடிப்பது என்னுடைய தொழில் அரசியலில் ஈடுபடுவது என்னுடைய விருப்பம்.

படத்தில் மட்டும் தான் கருத்து சொல்ல வேண்டும் என்ற அவசியம் இனியும் எனக்கில்லை. வெளியிலிலும் கருத்து சொல்வேன் எனவும் கூறியுள்ளார்.

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புகள் வரும் ஜனவரி 18-ம் தேதி முதல் பொள்ளாச்சி பகுதியில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.