பிக் பாஸ் சீசன் 5-க்கு கமல்ஹாசன் வாங்கும் சம்பளம் குறித்து தெரிய வந்துள்ளது.

KamalHaasan Salary For Bigg Boss5 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் சின்னத்திரையில் விஜய் டிவியில் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும் அடுத்தடுத்த சீசன் எந்தவித சர்ச்சையுமின்றி வெற்றி பெற்றது.

பிக் பாஸ் சீசன் 5.. கமல்ஹாசனுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா??

நடந்து முடிந்த நான்காவது சீசன் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தாமதமாக தொடங்கியது. அதேபோல் ஐந்தாவது சீசனும் தாமதமாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த சீசனை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனுக்கு ரூபாய் 50 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊரடங்கு முடிந்து கொரானா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்ததும் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 தொடங்கும் என கூறப்படுகிறது.