படப்பிடிப்பு தளத்தில் தாளம் போட்டு வைப் செய்த கமல்ஹாசனின் வீடியோ ட்ரெண்டிங்காகி வருகிறது.

இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். மாபெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ள இவர் விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தாய்வானில் நிறைவடைந்ததை தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு சவுத் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ளது. இதற்காக சவுத் ஆப்பிரிக்கா சென்று இருக்கும் நடிகர் கமல்ஹாசன் ஒரு பெரிய பவுலில் தனது கைகளால் தாளம் போடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரிதம் செக்சன் என குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார். பல திறமைகளை கையாண்டு வரும் நடிகர் கமல்ஹாசனின் இந்த வீடியோ ரசிகர்களை ரசிக்க வைத்து இணையத்தில் வெளியாகி ட்ரெண்டிங்காகி வருகிறது.