KamalHaasan Plan to Collaborate With DMK

கமல்ஹாசன் ரஜினி நம்பி இனி பயனில்லை என திமுகவுடன் இணைய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

KamalHaasan Plan to Collaborate With DMK : 2021 சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடு பிடித்து வரும் நிலையில், கட்சிகள் கூட்டணிகளை பற்றி தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. பிரதான கட்சிகளை தவிர, இது வரை இல்லாத அளவுக்கு புதிய கட்சிகளின் வருகை என்பது தற்போது அதிகமாகி விட்டது. அதனால் பிரதான கட்சிகளின் கூட்டணி கணக்குகள் மாறியுள்ளன என்று தான் கூற வேண்டும்.

கமல் மற்றும் ரஜினி வருகை, பா.ஜ.கவின் அரசியல் வியூகம் போன்றவை தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், தற்போதைய கூட்டணி கணக்கை மாற்றி போடும் முக்கியமான நிகழ்வு கடந்த வாரம் ரகசியமாக நடந்துள்ளது, மக்கள் நீதி மையம் தலைவர் கமல் ஹாசனை திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மூன்று முறை சந்தித்து பேசியுள்ளார், இதில் ஒரு சந்திப்பு கமலுடன் நெருக்கமாக இருக்கும் விஜய் டிவி மஹேந்திரன் இல்லத்திலும் மற்ற சந்திப்புகள் ஒரு நட்சத்திர விடுதியிலும் நடந்துள்ளன.

இந்த சந்திப்பின் போது கமல் 40 சீட்டுகள் கேட்டதாகவும், உதய் 20-25 சீட்டுகள் கொடுக்க தயாராக உள்ளதாகவும் தகவல்கள் கசிய துவங்கியுள்ளன. கடந்த இரண்டு நாட்களாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கமல் ஹாசன் அ.தி.மு.கவையும், பா.ஜ.கவையும் சாடி வருதுவதே இதற்கு சான்று என அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால், மற்ற கட்சிகள் கோவித்துக் கொள்ளும் என்பதால் தன மகன் உதயநிதியை இந்த ப்ராஜெக்டில் இறக்கியுள்ளார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.

கமல் ஹாசன் மூன்றாவது அணி அமைத்தால் தி.மு.கவின் வாக்குகள் சிதறும் என்று ஐ பாக் நிறுவனம் கொடுத்த அறிவுரையின் அடிப்படையிலேயே தி.மு.க இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும், காங்கிரஸ், இடதுசாரிகள் போன்ற கட்சிகளால் எந்த பயனும் இல்லை என ஐ பாக் ரிப்போர்ட் கொடுத்துள்ளது.

இதனால் ஐபேக் நிறுவனம் கொடுத்து ஆலோசனையின் பேரில் உதயநிதி ஸ்டாலின் கமல்ஹாசனை சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது.

கமலுக்கும் இதற்கு மேல் ரஜினியிடம் கேட்பதாக இல்லை என்ற எண்ணம் வந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கமல் ஹாசனும் தி.மு.க உடன் செல்வார் என தெரிகிறது.

அதுமட்டுமல்லாமல் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியலை விரும்புகிறார். கமல்ஹாசன் ஆன்மீகத்துக்கு அப்பாற்பட்ட அரசியலை விரும்புபவர். மேலும் இருவரின் கொள்கைகளும் வேறு வேறு என்பதால் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை எனவும் கூறப்படுகிறது.

இதனால் கமல் ஹாசன், திமுக கூட்டணி அமைய அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறலாம்.

இறுதியாக என்ன நடக்கிறது? 2021 அரசியல் களம் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.