KamalHaasan MNM

KamalHaasan MNM :

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மையம் போட்டியிடும் என கமல்ஹாசன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் என்ற புதிய கட்சியை தொடங்கி முழு நேர அரசியலில் இறங்கியுள்ளார்.

மேலும் அவர் இனி வரும் தேர்தல்களில் போட்டியிடுவேன் எனவும் இன்று சென்னையில் நடந்த நிர்வாகக்குழு மற்றும் செயற்குழுவில் அறிவித்துள்ளார்.

மேலும் மக்கள் நீதி மையத்தை போலவே ஒத்த கருத்துள்ள கட்சிகளும் கூட்டணி அமைக்கவும் தயார் என கூறியுள்ளார்.

மேலும் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைப்பீர்களா? என கேட்டதற்கு பதில் கூற மறுத்துள்ளார்.

மக்கள் நீதி மையம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக தொடர்ந்து பேச்சுகள் அடிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.