KamalHaasan

உலகநாயகன் கமல்ஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

KamalHaasan Look for Bigg Boss4 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் சின்னத்திரையில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலமாக தொகுப்பாளராக அறிமுகமாகி உள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய காரணத்தினால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் மூன்று சீசனில் பட்டி தொட்டி எங்கும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நாள் நான்காவது சீசனையும் அவரே தொகுத்து வழங்க உள்ளார்.

ஜூன் மாதமே தொடங்கியிருக்க வேண்டிய இந்த நிகழ்ச்சி ஒரு அச்சுறுத்தல் காரணமாக தள்ளிப் போயுள்ளது. அக்டோபர் மாதத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசன் தொடங்கலாம் என கூறப்படுகிறது.

இதற்காக உலக நாயகன் கமல்ஹாசன் மிகவும் வித்தியாசமான செம மாஸான லுக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இது பிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் டீசருக்கான லுக்காக இருக்கலாம் என கூறப்படுகிறது.

ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

https://twitter.com/Not_Heyram/status/1295965903373262849?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.