நேற்றைய தினம் தீபாவளி பண்டிகையை நடிகர் கமல்ஹாசன் தனது இல்லத்தில் மகிழ்ச்சியுடன் கொண்டாடி இருக்கிறார். அதில் அவரது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் ஆண்டவர் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். பெரும் ரசிகர் பட்டாளத்தையே கைக்குள் வைத்திருக்கும் இவர் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

வேட்டி சட்டையில் மாசாக போஸ் கொடுக்கும் கமல்ஹாசன்!!!… தீபாவளி ஸ்பெஷல் ஃபோட்டோ வைரல்!.

இதற்கிடையில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வரும் இவர் நேற்றைய தினம் தீபாவளி பண்டிகையை தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடி இருக்கிறார். அதில் பட்டு வேட்டி சட்டையில் கலக்கலாக இருக்கும் நடிகர் கமல்ஹாசன் வேட்டியை மடித்து கட்டி மாசாக போஸ் கொடுக்கும் ஒரு புகைப்படம் இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது.