ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது.

Kamalhaasan Indian 2 shooting update – சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகம் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்களும் வெளியானது. ஆனால் திடீரென அப்படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் நிறுத்தப்பட்டது.

விஜய்யுடன் ஜோடி சேர மறுத்த வளர்ந்து வரும் நடிகை-காரணம் இதுதான்.!

இப்போது இந்தியன் 2 படப்பிடிப்பு தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது. இப்படத்தில் சித்தார்த், ரகுல் பிரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர், விவேக் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். சமீபத்தில் சித்தார்த் ராகுல் ப்ரீத் சிங் சம்மந்தப்பட்ட காட்சிகளும், தந்தை கமல் மற்றும் மகன் கமல் மோதும் சண்டை காட்சியும் சென்னை வளசரவாக்கத்தில் எடுக்கப்பட்டது. அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில் நடக்க உள்ளது.

இளமையான கமலஹாசன் நடிக்கும் சில காட்சிகள் அங்கு படம் பிடிக்கப்படவுள்ளது. சுமார் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ரத்தினவேலு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.