நடிகர் சூர்யாவால் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்திற்கு சிக்கல் உருவாகி உள்ளது.

KamalHaasan in Vikram Movie Shooting Issue : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது.

நடிகர் சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் தான் நடைபெற்று வருகின்றன. கொரானா விதிமுறைகளை பின்பற்றி படப்பிடிப்புகளை நடத்த வேண்டும் என்பதால் ஒரே நேரத்தில் இரண்டு படங்களுக்கு அனுமதி கொடுக்க முடியாது என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

3-வது முறை கோப்பை வென்ற அணிக்கு, ரூ.50 லட்சம் பரிசு : உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இதனால் விக்ரம் படத்தின் சூட்டிங்கிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் 10 நாட்கள் நடைபெற உள்ளது. அது முடிந்த பிறகே விக்ரம் படத்தில் படப்பிடிப்புகளை நடத்த முடியும் என தகவல் கிடைத்துள்ளது.

விஜய்யின் Beast Netflix-ல் ரிலீஸ் ஆகிறதா? – அதிர்ச்சியில் ரசிகர்கள்! | Thalapathy VIjay | Nelson