KamalHaasan Health Status

கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

KamalHaasan Health Status : தமிழ் சின்னத்திரையில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தவர் கமல்ஹாசன். பின் நிகழ்ச்சி முடிந்த பிறகு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப் போவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இன்று காலை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கமல்ஹாசனுக்கு வெற்றிகரமாக காலில் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. அவர் நலமாக உள்ளார் என அவரின் இரு மகள்களான சுருதிஹாசனும், அக்ஷரா ஹாசனும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இன்னும் 4, 5 நாட்களில் வீடு திரும்பி விடுவார் எனவும் சில நாட்கள் ஓய்வுக்குப் பின்னர் மக்களை சந்திப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இறுதியில் இருவரும் அனைவரின் அன்பிற்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றியை தெரிவித்துள்ளனர்.

https://twitter.com/Iaksharahaasan/status/1351374405528559617?s=08