இனி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டேன் என கமல் ஹாசன் அதிர்ச்சிகர அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

KamalHaasan Exit From BB Ultimate : தமிழ் சின்னத்திரையும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சி இருபத்தி நான்கு மணி நேரமும் Stream ஆகும் வகையில் ஒளிபரப்பாகிறது. இதனையும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வந்தார். இரண்டு வாரங்கள் தொகுத்து வழங்கியவர் மூன்றாவது வாரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதால் விக்ரம் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இடையூறு ஏற்படுகிறது. இதன் காரணமாக இனி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொகுத்து வழங்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

ஆனால் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அதேசமயம் உலக நாயகன் இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொண்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.