Kamalhaasan Discharged from Hospital

நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

Kamalhaasan Discharged from Hospital : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தவர் கமல்ஹாசன்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப் போவதாக தகவல் வெளியானது.

கடந்த ஞாயிறு அன்று நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் கமல்ஹாசன் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் அவர் நலமாக உள்ளதாக விரைவில் வீடு திரும்புவார் எனவும், அவரது மகள் ஸ்ருதிஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

தற்போது அவர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.