பாபநாசம் 2 திரைப்படம் உருவாக வாய்ப்பே இல்லை என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

KamalHaasan Decison on Papanasam 2 : மலையாளத் திரையுலகில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் த்ரிஷ்யம். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் பாபநாசம் என்ற பெயரில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது.

பாபநாசம் 2 உருவாக வாய்ப்பே இல்லை..‌‌ காரணம் இந்த இரண்டு விஷயம் தான் - கமல்ஹாசன் எடுத்த முடிவு.!!

பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் நாயகனாக நடித்த கௌதமி நாயகியாக நடித்திருந்தார். தற்போது திரிஷ்யம் 2 வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்டது. இதனால் பாபநாசம் படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகும் என கூறப்பட்டு வந்தது.

வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி அதற்கு வாய்ப்பே இல்லை என பேசப்பட்டு வருகிறது. அதாவது பாபநாசம் முதல் பாகத்தில் நடித்த கௌதமி கமல்ஹாசனை பிரிந்து விட்டதால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது இயலாத ஒன்று. நாயகியை மாற்றினால் கதையிலும் மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். அது சுவாரசியமாகவும் இருக்காது.

Jagame Thandhiram படம் எப்படி இருக்கு?? மக்களின் கருத்து.! | Public Opinion | Tamil Review | Netflex

கமலுக்கு இரண்டாம் பாகம் என்பது ஒத்து வராத ஒன்றாகவே இருந்து வருகிறது. விஸ்வரூபம் 2 பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்தியன் 2 திரைப்படம் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. இதனால் பாபநாசம் 2 திரைப்படம் எடுக்கும் ஐடியாவே வேண்டாம் என கமல்ஹாசன் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.