Kamal vs MK Stalin
Kamal vs MK Stalin

Kamal vs MK Stalin – சென்னை: நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மற்றவர் சட்டையை தான் கிழிக்க வைப்பாரே தவிர, அவர் சட்டையைக் கிழித்துக் கொள்ள மாட்டார் என்று திமுக கடுமையாக விமர்சித்துள்ளத.

இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கமல், சட்ட சபையில் ஸ்டாலின் சட்டை கிழிந்தது, போன்றவற்றை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், அவரின் இந்த கருத்துகளுக்கு உதயநிதி ஸ்டாலினும் கமலுக்கு பதிலடி தரும் வகையில் கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் ‘திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் அரைப்பக்க அளவில் கமலின் அரசியல் அரைவேக்காட்டுத்தனம் என்ற தலைப்பில் கமலை கடுமையாக விமர்சித்து கட்டுரை வெளியாகி உள்ளது’.

சிலந்தி என்பவர் எழுதியுள்ள அந்த கட்டுரையில் கமலின் அரசியல் செயல்பாடு குறித்து விமர்சித்து கடுமையாக எழுதப்பட்டுள்ளது.

அதில், திராவிட முன்னேற்ற கழக வரலாற்றை கமலஹாசன் படித்தறிய வேண்டும், வெட்கம் என்ற பொருளறியாது, வெட்கங்கெட்ட செயல்களை வெளிப்படையாக செய்து கொண்டிருப்பவர் கமல் என்றும், மூன்றாம் பிறை படத்தில் ரயில் நிலையத்தில் தலைமுடியை பிய்த்துக் கொண்டு சட்டையை கிழித்து கொண்டு ஓடுவாரே அந்த காட்சிகள் நிஜத்தில் நடந்துவிடுமோ(?) என்று அஞ்சுவதாக அந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

மேலும் பின்னால் வருபவர்களை எங்கே அழைத்துச் செல்லப் போகிறோம் என்று தெளிவற்று திரியும் நடிகர் கமலஹாசன், மற்றவர்களைப் பார்த்து வெட்கமில்லையா எனக் கேட்பது கேலிக் கூத்தல்லவா? என்றும் கமலை கடுமையாக விமர்சித்திருக்கிறது அந்த கட்டுரை.

ஸ்டாலினை விமர்சித்து கமல் பேசியதை அடுத்து, தற்போது திமுக கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம்(!) செய்து வருகிறது.