அஜித்தின் அமர்க்களம் படத்தில் படம் முழுக்க கமல் குறித்த காட்சிகள் இடம்பெற்று வருவதை எத்தனை பேர் கவனித்துள்ளீர்கள்?

Kamal Reference in Amarkalam Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்று அமர்க்களம். அஜித்திற்கு மாபெரும் வெற்றியை கொடுத்த படம் என்றால் அது அமர்க்களம்தான். இந்த படத்தினை இயக்குனர் சரண் இயக்கினார்.

இந்த படத்தின் அறிமுக காட்சியில் தல அஜித் தேவர் மகன் படத்தின் போஸ்டர் மீது தான் படுததுக் கொண்டிருப்பார்.

இருக்கும் இடத்தில் இருந்தே வழிபடலாம், ‘கங்கா ஸ்நானம்’ : வழிமுறைகள்..

ரகுவரன் மற்றும் துளசி அறிமுகமாகும் காட்சியில் நாயகன் பட போஸ்டர் இடம் பெற்றிருக்கும். ஷாலினி அஜித் வீரம் காதலை சொல்ல தியேட்டருக்கு வரும் போது அவருக்கு பின்புறத்தில் கமலின் நிழல் நிஜமாகிறது பட போஸ்டர் இருக்கும்.

சிம்பு விவகாரத்தில் Modi-யையும் சந்திக்க தயார்! – Silambarasan Mother Usha Rajendar ஆவேச பேட்டி

இறுதியாக காதலின் வலியை உணர அஜித் பார்க்கும் படம் கமலின் ஏக் துஜே கே லியே.

அஜித்தும் ரகுவரனும் நாசரை பழி வாங்க திட்டம் போடும் காட்சியில் ஒரு கைதியின் டைரி பட போஸ்டர் இடம் பெற்றிருக்கும்.

ஏக் துஜே கேலியே படத்தில் கமலின் பெயர் வாசு. அமர்க்களம் படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் வாசு. இப்படி அமர்க்களம் படம் முழுவதும் கமல்ஹாசன் ரெபரென்ஸ் இருந்துகொண்டே இருக்கும். தல அஜித்தின் அமர்க்களம் திரைப்படம் வெளியாகி 22 வருடங்களாகிய நிலையில் தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.