இந்தியன் 2 திரைப்படத்திற்காக நடிகர் ஷங்கரின் செயலை பார்த்து நடிகர் கமல்ஹாசன் ஆச்சரியப்பட்டு இருக்கிறார்.

இந்திய திரை உலகில் ஆண்டவர் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வரும் நடிகர் தான் கமல்ஹாசன். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கமல்ஹாசன், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் “இந்தியன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் முதல் பாகம் 1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியானது. இப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பல சர்ச்சைகளை தாண்டி நடைபெற்று வருகிறது.

இயக்குனர் ஷங்கரின் செயலால் ஆச்சரியத்தில் கமல்!!!… இதுதான் விஷயமா?? முழு விவரம் இதோ!.

மேலும் இப்படத்தினை லைகா புரொடக் ஷன்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் RC15 திரைப்படத்தை பிரமாண்டமாக இயக்கி வருகிறார்.

இயக்குனர் ஷங்கரின் செயலால் ஆச்சரியத்தில் கமல்!!!… இதுதான் விஷயமா?? முழு விவரம் இதோ!.

தற்போது தமிழில் இந்தியன் 2 படம் துவங்கப்பட்டதால் இரண்டு படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார். இரண்டு படங்களும் பிரமாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருவதால் படப்பிடிப்பு தன்னால் தாமதம் ஆகக்கூடாது என்று இரவு, பகலாக வேலை செய்து வருகிறார். இதனால் இரண்டு படங்களின் படப்பிடிப்பும் எந்தவித தடங்களுமின்றி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எனவே ஷங்கரின் இந்த அயராத உழைப்பை பார்த்து கமலஹாசன் ஆச்சரியப்பட்டு இருக்கிறாராம். மேலும் இந்தியன் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் தற்போது முடிவாகியுள்ளது. அதன்படி இந்த படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு திரையில் வெளியாக உள்ளது. எனவே இதனை கருத்தில் வைத்துக்கொண்டு படக்குழு விறுவிறுப்பாக படப்பிடிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.