இந்தியன் 2 விக்ரம் இரண்டு படத்தையும் உதறித் தள்ளிவிட்டு பாபநாசம் 2 படத்தில் கமல் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Kamal in Papananasam 2 : தமிழ் சினிமாவில் மிகப் பெரிய ஜாம்பவான் நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தற்போது இந்தியன் 2 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் இந்த திரைப்படம் பல்வேறு பிரச்சினைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது.

இந்தியன் 2, விக்ரம் இரண்டையும் உதறித் தள்ளும் கமல்.. இப்போ இந்த படத்தில் நடிக்கிறாரா? வெளியான ஷாக் தகவல்

இது ஒருபுறமிருக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இந்த படத்திற்கான நடிகர் நடிகைகளை தேர்வு செய்யும் வேலைகள் இழுபறியாகவே இருந்து வருகிறது. இதனால் உலக நாயகன் கமல்ஹாசன் இப்போதைக்கு இந்த இரண்டு படங்களுமே வேண்டாம் என முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

பாபநாசம் படத்தின் இரண்டாம் பாகத்தில் எடுக்கலாம் என முடிவெடுத்துள்ளாராம். ஒரே மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகளை முடித்து ரிலீஸ் செய்யும் திட்டத்தில் அவர் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன.