
லியோ படத்தில் கமல்ஹாசன் நடிக்க போவதாக தகவல் வெளியான நிலையில் அது குறித்து விளக்கம் கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் எக்கச்சக்கமான பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படம் லோகேஷ் யுனிவர்சல் படமாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்து வருகிறது.
அதேபோல் இந்த படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக உன் தகவல் பரவிய நிலையில் அதற்கு 200% வாய்ப்பு இல்லை என தெரியவந்துள்ளது. இதுவரை லோகேஷ் இந்த படத்தில் கமல்ஹாசனை நடிக்க வைக்க முடிவு செய்யவில்லை என தெரியவந்துள்ளது.

இதனால் விஜயுடன் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.