படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக முத்தத்தை பரிசாக கொடுத்துள்ளார் கமல்ஹாசன். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் தான் ‘விக்ரம்’. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்தப்படத்தில் முன்னணி நட்சத்திரங்களான  விஜய் சேதுபதி, பகத் பாஸில், சூர்யா, போன்று பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் கதாநாயகனாக உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து இருந்தார். 

இந்தப் படம் மக்களிடையே  விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்த நிலையில் தற்போது மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. தற்போது இப்படத்தின் வசூல் 300 கோடியை தாண்டி உள்ளதாகவும் மேலும் இனி வரும் நாட்களில் படத்திற்கான வசூல் அதிகரிக்கும் என்றும் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக நேற்று சென்னையில் இப்படத்திற்கான வெற்றிவிழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், அனிருத் ஆகியோருக்கு கமல்ஹாசன் முத்தத்தை அன்பு பரிசாக  கொடுத்திருக்கிறார். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.