திரைப்பயணத்தில் 65 வருடங்களை கடந்துள்ளார் கமல்ஹாசன்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை மணிரத்தினம் இயக்கி வருகிறார்.
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இதுவரை சாதித்துக் கொண்டு வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
1959 ஆம் ஆண்டு குழந்தை பருவத்தில் நடிக்க தொடங்கிய கமல்ஹாசன் அயராத உழைப்பாலும், திறமையாலும் இன்று தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்து வருகிறார்.
களத்தூர் கண்ணம்மா படத்தில் நடிப்பை தொடங்கி தக் லைஃப் படம் வரை தன் திறமையை தமிழ் சினிமாவிற்கு எடுத்துக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் பல்வேறு பிரபலங்களும் ரசிகர்களும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றன.