Kamal Haasan Voice in Ajith Movie
Kamal Haasan Voice in Ajith Movie

அஜித் நடித்த படத்தில் அவருக்காக உலகநாயகன் கமல்ஹாசன் ஒரு பாடலை பாடியுள்ளார்.

Kamal Haasan Voice in Ajith Movie : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வளர்ந்து இருப்பவர் தல அஜித். இவர் வளர்ந்து வரும் காலத்தில் தமிழ் தெரியாமல் இவருடைய படங்களுக்கு பல நடிகர்கள் குரல் கொடுத்துள்ளனர். அவர்களின் முக்கியமானவர் விக்ரம்.

இவர்கள் இருவரும் இணைந்து தமிழ் சினிமாவில் உல்லாசம் என்ற படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தை அமிதாப்பச்சன் தயாரிக்க கார்த்திக் ராஜா இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் உலகநாயகன் கமலஹாசன் முத்தே முத்தம்மா என்ற பாடலை பாடியிருந்தார். அப்போதைய காலகட்டத்தில் இப்பாடல் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

#45YearsofRajinism.. தல அஜித் செய்த அதிரடி செயல்.. அசந்து போன ரஜினிகாந்த் – தீயாக பரவும் தகவல்

ஆனால் ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத விதமாக உல்லாசம் திரைப்படம் தோல்வியைத் தழுவியது. அஜித் வளர்ந்து வந்த காலத்தில் அவரது படத்தில் மாபெரும் நடிகரான உலக நாயகன் கமல்ஹாசன் பாடியிருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இந்த உல்லாசம் திரைப்படத்தை JD & Jerry ஆகியோர் இயக்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.