Kamal Haasan Salary for Bigg Boss 4
Kamal Haasan Salary for Bigg Boss 4

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனை தொகுத்து வழங்க கமல்ஹாசன் கேட்கும் சம்பளம் குறித்த தகவல் கசிந்துள்ளது.

Kamal Haasan Salary for Bigg Boss 4 : தமிழ் சினிமாவில மாபெரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாச‌ன்.

படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக தொகுப்பாளராகவும் அறிமுகமானார்.

டாக்டர் படத்தின் கதை இது தான் தெளிவுபடுத்திய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் – அப்போ கொண்டாட்டம் தான்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதால் பட்டி தொட்டி எங்கும் பரபரப்பாக பேசப்பட்டது.

இதுவரை மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் நான்காவது சீசன் ஜூன் மாதம் தொடங்கும் என கூறப்பட்டு வந்தது.

ஆனால் பரவி வரும் கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக சூட்டிங்கள் நடத்த முடியாமல் சென்றதால் இந்த நிகழ்ச்சியின் தொடக்கமும் தள்ளி போய் உள்ளது.

தற்போது சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதால் இந்த நிகழ்ச்சியும் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நான்காவது சீசனையும் உலக நாயகன் கமலஹாசன் அவர்களே தொகுத்து வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

திருமணம் குறித்து பேசிய ஓவியா… இப்படி தான் நல்லா இருக்காம்.!

மூன்றாவது சீசன் தொகுத்து வழங்க ரூபாய் 15 கோடி சம்பளம் வாங்கிய கமல்ஹாசன் தற்போது நான்காவது சீசனை தொகுத்து வழங்க சம்பளத்தில் ரூபாய் 10 கோடி‌ உயர்த்தி ரூபாய் 25 கோடியாக சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது.

இதற்கான பேச்சு வார்த்தைகள் தற்போது நடந்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. விரைவில் பிக் பாஸ் சீசன் 4-ற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.