Kamal Haasan Review on Gypsy
ஜிப்ஸி படம் பார்த்து விட்டு படக்குழுவினரை பாராட்டியுள்ளார் கமல்ஹாசன்.

Kamal Haasan Review on Gypsy Movie : தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலமாக மக்கள் மனதில் சிறந்த இயக்குனராக தடம் பதித்தவர் ராஜு முருகன்.

இவரின் அடுத்த படைப்பாக தற்போது ஜீவா, நடாஷா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ஜிப்ஸி. ஜாதி, மதம், இனம் இதையெல்லாம் விட்டு விட்டு மனிதத்தை மட்டுமே போற்றுவோம், பின்தொடர்வோம் என இப்படம் வலியுறுத்துகிறது.

தற்போது உலக நாயகன் கமலஹாசனும் இப்படத்தை பார்த்து விட்டு படக்குழுவினரை அழைத்து பாராட்டியுள்ளார். ‘

‘மதவெறி, சாதிவெறி உள்ளிட்ட அத்தனை பிரிவினைகளையும் அடித்துநொறுக்கும் ஆயுதம் மனிதம் மட்டுமே என்ற இன்றைய காலத்துக்கு தேவையான கருத்தை வலியுறுத்தும் திரைப்படம் ஜிப்ஸி. படக்குழுவினர் அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்”. என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.