Kamal Haasan Question to Central Government
Kamal Haasan Question to Central Government

20 லட்சம் கோடியில் தமிழ் நாட்டுக்கு என்ன பயன் என கமலஹாசன் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Kamal Haasan Question to Central Government : கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்திய பொருளாதாரமே தலைகீழாகி விட்டது.

இந்த நிலைமையில் இருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி மத்திய அரசு 20 லட்சம் கோடியை ஒதுக்கி உள்ளது.

இது குறித்த அறிவிப்புகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்த நிலையில் பலதுறைகளில் தனியாருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவித்திருந்தது.

மத்திய அரசின் இந்த அறிவிப்புகள் குறித்து மக்களிடம் எதிர்ப்பு, வரவேற்பு என இரண்டும் சமமான அளவில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு?

மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் எடுத்த செல்ஃபி படைத்த சாதனை – இதெல்லாம் தளபதி ஒருவருக்கே சாத்தியம்!

மாநிலத்திற்கு நியாயமாக வர வேண்டியதைக் கேட்டால் எங்கே எஜமானர் மனசு கோணி விடுமே என்ற பயம்.

ஆகவே டாஸ்மாக்கில் மக்கள் உயிரைப் பணயம் வைத்து பணம் பறிக்கிறது அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு விமர்சித்துள்ளார்.

மக்கள் நீதி மையம் என்ற புதிய கட்சி ஆரம்பத்திலிருந்து கமலஹாசன் மத்திய மாநில அரசுகளை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறக்கப்பட்டதும் அதனை எதிர்த்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை மூடியது.

பின்னர் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்றி டாஸ்மாக் கடைகளை திறந்து மது விற்பனையை தொடங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கமலஹாசனின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் ஒருபுறம் ஆதரவு தெரிவித்து வந்தாலும் மறுபுறம் 50 வருடமாக நீங்கள் எங்கே சென்று இருந்தீர்கள்??

இவ்வளவு நாளாக நீங்களும் ஒரு குடிகாரராக இருந்துவிட்டு உங்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டது அதிலிருந்து மீண்டு அதற்கு எதிராக பேசியது எவ்விதத்தில் நியாயம் என கூறி வருகின்றனர்.

https://twitter.com/AMRarmy_/status/1261974662969344001?s=19

https://twitter.com/AMRarmy_/status/1261977821376888837?s=19