கமல் நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் அஜித் பட நாயகி ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது கமல்ஹாசன். இவரது நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இது குறித்த அறிவிப்பையும் படக்குழு சமீபத்தில் தெரிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘கமல் 234’ திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்த அறிவிப்பையும் படக்குழு சமீபத்தில் தெரிவித்ததை தொடர்ந்து இதில் கமலுக்கு ஜோடியாக நடிக்க திரிஷா மற்றும் நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அதிலும் குறிப்பாக நயன்தாரா முதல்முறையாக கமலுடன் இணைந்து இப்படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்பட்டது.

ஆனால், தற்போது வெளிவந்திருக்கும் புது தகவலின்படி, இப்படத்தில் அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்க இருப்பதாகவும் இது குறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் இது குறித்த அதிகாரம் பூர்வமான அறிவிப்பிற்காக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.