தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தை பார்த்த பிறகு உலக நாயகன் கமல் தனது கருத்தை தெரிவித்து உள்ளார்.

Kamal Haasan Congratulated The Asuran Team : வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் பொல்லாதவன், ஆடுகளம் மற்றும் வட சென்னை ஆகிய படங்களில் நடித்து உள்ளார்.

இவர்களின் கூட்டணி வெற்றி கூட்டணியாகவே இதுவரை இருந்து வருகின்றது. ஆடுகளம் படம் தேசிய விருது பெற்ற படமாகும்.

அதனை தொடர்ந்து, வட சென்னை படம் பெரிய எதிர்பார்பில் வெளியானது, அதற்கேற்ப படம் சம மாஸாக இருந்தது.

Kamal Haasan Congratulated The Asuran Team

அடுத்து, இவர்களின் கூட்டணியில் வட சென்னை 2 வரும் என்று தகவல் வெளியாகி இருந்த நிலையில், அசுரன் படப்பிடிப்பை தொடங்கினார்கள்.

இந்த நிலையில், அசுரன் வெளியாகி அதிக வசூலை பெற்று வருகிறது. சமீபத்தில் அசுரன் படம் பார்த்த உலக நாயகன் கமல், தனுஷ் அவர்களை தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

அசுரன் படத்தில் தனுஷ் நடிப்பு நன்றாக இருந்ததாகவும், இதே போன்ற நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றும் லண்டனில் இருக்கும் தனுஷுக்கு கமல் கூறியுள்ளார்.

மேலும், அசுரன் பட இயக்குனர் வெற்றிமாறனையும் தொலைபேசி மூலம் அழைத்து வாழ்த்து தெரிவித்து உள்ளார். படத்தின் கதாநாயகியை நேரில் சென்று வாழ்த்தி உள்ளார் கமல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here