Kamal Haasan Bold Speech | TAMILA you Need to be the Leader. This is my Request | Makkal Needhi Maiam | Kollywood | Tamil Cinema

Kamal Haasan Bold Speech :

சென்னை: தமிழா நீ தலைவனாக வேண்டும். இதுவே என் வேண்டுகோள், சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தையும் நிறுத்த நினைக்கின்றனர் மத்திய, மாநில அரசுகள் இதுபோன்ற சில கருத்துகளை கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து.

அவர் பெயர் நாதுராம் கோட்சே” என்று பேசியிருந்தார். கமலின் இந்தப் பேச்சுக்குப் பல தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன.

இருப்பினும் சிலர் இதற்கு ஆதரவும் தெரிவித்தனர். மேலும் கமல் தான் இவ்வாறு கூறியதில் தவறில்லை என திட்டவட்டமாக தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் கமல்ஹாசன் தனது டிவிட்டரில் தற்சமயம் ஒரு டிவிட் பதிவு செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, ‘சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தையும் நிறுத்த நினைக்கின்றனர் மத்திய, மாநில அரசுகள்.

அயோக்யா படத்தால் கடும் உளைச்சலில் கத்தி பிரபலம் – அவரே சொன்ன தகவல்!

மக்கள் எடுத்துவிட்ட முடிவை தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது. 12 ஆழ்வார்களாலோ, 63 நாயன்மார்களாலோ, இந்து என்கின்ற மதக்குறிப்பு சொல்லப்படவில்லை.

முகலாயர் அல்லது அதற்கு முன் ஆள வந்தாராலோ இந்து என நாமகரணம் செய்யப்பட்டோம். ஆண்டு அனுபவித்துச் சென்ற ஆங்கிலேயர் அந்த அடைமொழியை வழிமொழிந்தனர்.

நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும்பொழுது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் பெயராக, மதமாக கொள்வது எத்தகைய அறியாமை(!?).

நாம் இந்தியர் என்கின்ற அடையாளம் சமீபத்தியது தான் எனினும் காலம் கடந்து வாழக்கூடியது. நாம், நம் அகண்ட தேசத்தை மதத்திற்குள் குறுக்க நினைப்பது வர்த்தக மற்றும் அரசியல், ஆன்மீக ரீதியாகவும் பிழையான தேர்வாகும்’ இவ்வாறு டிவிட்டரில் பதிவு செய்திருந்தார்.

அதோடு, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று எத்தனை முறை தமிழனுக்கு பழமொழி சொல்லியிருக்கின்றோம்.

கோடின்ன உடனே பணம் ஞாபகம் வந்தால் நீ தலைவன் அல்ல, அரசியல்வாதி அல்ல.இது வெறும் வியாதி.. தமிழா நீ தலைவனாக வேண்டும். இதுவே என் வேண்டுகோள்!! இவ்வாறு கமல் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.