இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் புதிய லுக்கில் கலந்து கொண்ட கமல்ஹாசன் தனது புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

இந்திய திரை உலகில் ஆண்டவர் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வரும் நடிகர் தான் கமல்ஹாசன். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கமல்ஹாசன், ஷங்கர் இயக்கத்தில் உருவாக இருக்கும் “இந்தியன் 2” திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

மாசான லுக்கில் இந்தியன் 2 படப்பிடிப்பில் இணைந்துள்ள கமல்ஹாசன்!!… உற்சாகத்தின் உச்சியில் ரசிகர்கள்!.

இப்படத்தின் முதல் பாகம் 1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியானது. இப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பல சர்ச்சைகளை தாண்டி நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தினை லைகா புரொடக் ஷன்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்க உள்ளார்.

மாசான லுக்கில் இந்தியன் 2 படப்பிடிப்பில் இணைந்துள்ள கமல்ஹாசன்!!… உற்சாகத்தின் உச்சியில் ரசிகர்கள்!.

இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவு வைரலாகி வருகிறது. அதில் அவர், “இன்று முதல் இந்தியன் 2 படப்பிடிப்பில்” என்று இயக்குநர் ஷங்கருடன் புது லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அப்பதிவினை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.