பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதில்லை என்ற பதிவை வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் கமல்ஹாசன். இவர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து ஏழு வருடங்களாக தொகுத்து வழங்கி வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. என்று அனைவருக்கும் தெரியும்.
ஏழு சீசன் கல் வெற்றிகரமாக முடிந்த நிலையில் எட்டாவது சீசன் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் 7 சீசர்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் எட்டாவது சீசனையும் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் கமல்ஹாசன் பதிவு ஒன்றை வெளியிட்டு அதில் பிக் பாஸில் இருந்து சிறிது ஓய்வு எடுக்க உள்ளதாக வெளியிட்டுள்ளார்.
கமல்ஹாசன் வெளியிட்ட அந்தப் பதிவில் “7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய எங்கள் பயணத்திலிருந்து நான் ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
மேலும் உங்கள் வீடுகளுக்கு சென்றடையும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. உங்கள் அன்பையும் பாசத்தையும் நீங்கள் எனக்கு பொழிந்து இருக்கிறீர்கள். அதற்காக உங்களுக்கு என் நன்றியுணர்வு இருக்கிறது.பிக் பாஸ் தமிழ் இந்தியாவின் சிறந்த தொலைக்காட்சியில் ஒன்று.நான் எனது கற்றலை நேர்மையாக பகிர்ந்து கொண்டேன், இந்த கற்றல் அனுபவத்திற்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். உங்கள் ஒவ்வொருவரையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன்,
கடைசியாக விஜய் டிவியின் அந்த அற்புதமான குழுவினருக்கும், இந்த நிறுவனத்தை ஒரு மாபெரும் வெற்றியடையச் செய்வதில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு குழுவினருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
கமல்ஹாசனின் இந்த பதிவு பிக் பாஸ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.