Kamal

தோல்வியை தழுவியது ஏன் என சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து கமல்ஹாசன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Kamal Dicussion With MNM Members : தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். மேலும் தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டார்.

ஆனால் மக்கள் நீதி மையம் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. உலக நாயகன் கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் மட்டும் முன்னணியில் இருந்து வந்து கடைசியில் 1500 ஓட்டுகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோல்வியை தழுவினார்.

இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவியது ஏன் என மக்கள் நீதி மைய நிர்வாகிகள் உடன் ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மகேந்திரன், சினேகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.