வேளாண் சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டது குறித்து சூர்யா, கமல் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Kamal and Surya on Farmer Masotha : கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மத்திய அரசு கொண்டு வரப்பட்ட வேளாண் சட்ட மசோதாக்கள் முழுவதுமாக திரும்ப பெறப்படுவதாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி மக்கள்தான் உரையாடியபோது அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வேளாண் சட்ட மசோதா வேணாம் என விவசாயிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. பிரதமரின் இந்த அறிவிப்பு குறித்து பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

11 நாட்கள், மகா தீப தரிசனம்.!

இந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு குறித்து நடிகர் சூர்யா மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர்.

திரும்ப பெறப்பட்ட வேளாண் சட்ட மசோதா.. சூர்யா, கமல் அதிரடி கருத்து - என்ன சொல்கிறார்கள் பாருங்க.!!

சூர்யா இது குறித்து பதிவு செய்துள்ள பதிவில் உழவே தலை.. விவசாயிகளின் அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது. ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. உறுதியாக இறுதிவரை போராடிய விவசாய பெருமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

பிறந்தநாளில் ரசிகர்களுடன் இரத்த தானம் செய்த Arun Vijay – குவியும் பாராட்டு | HD

அதேபோல் உலக நாயகன் கமல்ஹாசன் இது குறித்த பதிவில் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். அறவழியில் போராடி வென்ற விவசாயிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். வேளாண் விரோதச் சட்டங்களை உறுதியாக எதிர்த்ததும், மநீம தலைவர்கள் டெல்லி சென்று போராடியதும் பெருமை கொள்ளத்தக்க வரலாற்றுத் தருணங்கள் என பதிவு செய்துள்ளார்.