Kali Doss
நடிகர் பரத்தின் காளிதாஸ் படத்தை பார்த்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் பாலாஜி மோகன் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பரத். இவரது நடிப்பில் காளிதாஸ் திரைப்படம் வெகு விரைவில் ரிலீசாக உள்ளது.

பரத் போலீசாக நடித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சூப்பரான வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இந்த படத்தை பார்த்து விட்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜும் பாலாஜி மோகனும் பாராட்டியுள்ளனர்.

கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் படத்தையும் படக்குழுவையும் வெகுவாக பாராட்டியுள்ளார். அதே போல் பாலாஜி மோகன் சிறப்பான திரில்லர் படம், கதையை அருமையாக கொண்டு சென்றுள்ளனர் எனவும் பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

Karthick Subburaj Balaji Mohan