Kalappai Makkal Iyakkam in Womens Day Celebration

கலப்பை மக்கள் இயக்கத்தின் சார்பாக உலக மகளிர் தின விழா நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்டோர் கலப்பை இயக்கத்தில் இணைந்தனர்!

Kalappai Makkal Iyakkam in Womens Day Celebration : அழகப்பபுரம் பாத்திமா சுடர் மகளிர் மன்றம் மற்றும் கலப்பை மக்கள் இயக்கத்தின் சார்பாக மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில் கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவனர் கலப்பை பிடி செல்வகுமார் கலந்து கொண்டு ஏழை பெண்களுக்கு தையல் மிஷின்கள் வழங்கினார்.

விழாவில் பாத்திமா சுடர் மகளிர் மன்ற தலைவர் சாந்தி, செயலாளர் அஜிதா, பொருளாளர் விஜிலா, ரோஜா, சாதனா, பெனில், அமுதா, சுஜாதா, சோபியா அழகப்பபுரம் பங்கு பேரவைதுணை தலைவர் விக்டர் நாவாஸ் , மகளிரணி துணைதலைவி ரங்க நாயகி பங்கேற்றனர்.

சிறப்பு விருந்தினர் பி.டி.செல்வகுமார் பேசும்பொழுது ‘ஒரு வீடும் , நாடும் சிறப்பாக இருப்பதும் பெண்களினாலே அத்தகைய பெருமை கொண்ட மகளிரை மரியாதை கொடுத்து வணங்க வேண்டும் ! பெண்களை நம் நாடு தாயாக போற்றுகிறது !அந்த பெண்களுக்கு சரியான வாய்ப்பு கொடுத்து அவர்களுக்கு கல்வி அறிவு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான பாதுகாப்பை குடும்பத்திலுள்ள மற்றவர்கள் ஏற்படுத்தி கொடுத்தால் நம் நாடும் முன்னேறும்! வீடும் முன்னேறும்! என்று கூறினார்.

மேலும் சாத்தான்குளம் பங்கு தந்தை ஜோசப், கலப்பை மக்கள் இயக்க ஆலோசகர் கலைச்செல்வன், தூத்துக்குடி மறைமாவட்ட பங்கு தந்தை வளன்அரசு, கலப்பை இயக்க கலை பிரிவு தலைவர் காப்பித்துரை,சட்ட ஆலோசகர் பாலகிருஷ்ணன், துணை தலைவர் ஜெகன்,இணைய தள பொறுப்பாளர் கார்த்திக் ராஜா மிக்கேல் மற்றும் பழனி குமார் கலந்து கொண்டனர்.

மகளிர் தின விழாவில் பாத்திமாசுடர் மகளிர் மன்றத்தை சார்ந்த 100 பெண்கள் தங்களை கலப்பை மக்கள் இயக்கத்தில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு கலப்பை மக்கள் இயக்க நிறுவனர் பி.டி செல்வகுமார் உறுப்பினர் அட்டையை வழங்கினார். விழாவில் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கலப்பை மக்கள் இயக்க செயலாளர் ஜான் கிறிஸ்டோபர் சிறப்பாக செய்திருந்தார்.