Kalappai Makkal Iyakkam

Kalappai Makkal Iyakkam For Delta :

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்காக கலப்பை மக்கள் இயக்கம் தொடர்ந்து உதவி வருகிறது. இந்த புயலால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.

இதனால் தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான பி.டி செல்வகுமார் அவர்கள் தான் இயக்கி வரும் கலப்பை மக்கள் இயக்கத்தின் மூலமாக இப்பகுதி மக்களுக்காக தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகிறார்.

முதலில் 27 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை டி.ராஜேந்தர் அவர்களின் முன்னிலையில் சென்னையில் இருந்து அனுப்பி வைத்ததை தொடர்ந்து ஜி.வி பிரகாஷ் முன்னிலையில் 500 பசுமாட்டு கன்றுகளை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கி இருந்தனர்.

இதனை தொடர்ந்து தற்போது கவிப்பேரரசு கவிஞர் வைரமுத்து அவர்களின் முன்னிலையில் 1008 ஆடுகளை பாதிக்கப்பட்ட 12 மாவட்ட மக்களுக்கு வழங்கியுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியில் உள்ள ரம்யா சத்தியநாதன் வித்யாஷ்ரம் பள்ளியில் நடந்த இந்த நிவாரண முகாமில் கலந்து கொண்டு ஆடுகளை வழங்கி பின்பு கவிஞர் வைரமுத்து பேசியதாவது, இது மக்களுக்கு உதவ வேண்டிய தருணம். குறை சொல்வதற்கான நேரம் இல்லை என கூறினார்.

மேலும் நான் விவசாய குடும்பத்தை சேர்ந்த மகன். விவசாயிகளின் கஷ்டம் என்ன என்பது எனக்கும் தெரியும். தமிழர்கள் தங்களுடைய குடும்ப அட்டையில் ஆடு மாடுகளை சேர்ந்து கொள்ள வேண்டும் என கூறினால் கூட நிச்சயம் சேர்த்து கொள்வார்கள். ஏனென்றால் ஆடு மாடுகளை தங்களது பிள்ளைகளாவே எண்ணி வளர்க்கிறார்கள் என கூறியுள்ளார்.

ஆடு மாடுகளை இழந்து தவிக்கும் விவசாயிகளின் வேதனை தங்களது குழந்தைகளை இழந்ததற்கு சமமான வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அதே போல் அனைத்து மரங்களையும் நாம் பிள்ளைகள் என கூறுவதில்லை.

தென்னை மரங்களை மட்டும் தான் பிள்ளளைகள் என அழைப்பார்கள். தென்னை பிள்ளைகளை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு மத்திய மாநில அரசுகள் உடனடியான தக்க நிவாரணத்தை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதனையடுத்து 1008 ஆடுகள் என்பது சாதரண விசயமல்ல.. நோயில்லாத ஆடுகளை கண்டு பிடிப்பதே சிரமான ஒன்று. அப்படியிருந்தும் ஆரோக்யமான 1008 ஆடுகளை வழங்கியுள்ள பி.டி செல்வகுமாரின் தொலைநோக்கு பார்வை பாராட்ட வேண்டியது. செல்வகுமாரின் மிக பெரிய புண்ணியத்துவம் வாய்ந்த முயற்சியை எண்ணி பெருமை கொள்கிறேன், மகிழ்ச்சி அடைகிறேன் என பாராட்டி பேசினார்.

கவிப்பேரரசு வைரமுத்துவை தொடர்ந்து கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி செல்வகுமார் அவர்கள் பேசியதாவது, தமிழர்களின் பெருமைகளையும் திறமைகளும் உலகம் முழுவதும் தெரியும் அளவிற்கு மிக பெரிய கோவிலை கட்டி தமிழர்களை தலை நிமிர வைத்த ராஜராஜ சோழன் வாழ்ந்த மண்ணில் இப்படியான பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உலகமே வருந்த வேண்டிய விசியம்.

உலக மக்கள் அனைவரும் இணைந்து நம்முடைய டெல்டா மக்களுக்காக உதவ வேண்டும், அவர்களது வாழ்வாதாரத்தை உயர்ந்த முன்வர வேண்டும். இல்லையேல் இந்த டெல்டா பகுதி மக்களின் வாழ்க்கை 30 வருட பின்னடைவை சந்திக்கும் அவலம் ஏற்பட்டு விடும் என உருக்கமாக பேசினார்.

கலப்பை மக்கள் இயக்கம் முதலில் பசு மாடுகளை வழங்கியது, தற்போது 1008 ஆடுகளை வழங்கியுள்ளது.

இதற்கெல்லாம் காரணம் ஒருவனுக்கு மீன் கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்று கொடுப்பது தான் மிக பெரிய உதவியாக இருக்கும் என்பதை நினைவில் வைத்து மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த தெடர்ந்து உதவி வருகின்றனர்.

தொடர்ந்து மக்களுக்காக உதவி செய்து வரும் இந்த கலப்பை மக்கள் இயக்கம் இனி வரும் காலங்களில் மிக பெரிய இயக்கமாக உருவாகி மக்களுக்காக தொடர்ந்து போராட வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பமாக இருக்கிறது.

இந்த சிறப்பு வாய்ந்த முகாமில் கவிப்பேரரசு வைரமுத்துவுடன் கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர் பி.டி செல்வகுமார், கலப்பை மாநில துணைத் தலைவர் நந்தகுமார், மாநில ஒருங்கிணைப்பாளர் Dr.V.K வெங்கடேசன், மாநில செயலாளர் எஸ்.எம் ராஜகுமார், எஸ்.ஏ.சி பள்ளி நிறுவன தலைவர் யோகராஜ்,வெற்றி பேரவை தலைவர் செழியன், பள்ளி தாளார் சத்ய நாராயனனண், பள்ளி இயக்குநர் ரம்யா சத்யா நாராயணன்,வேர்கள் அடைகல் ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here