Kalappai Makkal Iyakkam

Kalappai Makkal Iyakkam : கலப்பை மக்கள் இயக்க நிறுவனர் பி.டி.செல்வகுமார் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் ரூ.25 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்களை சென்னை சாலிகிராமத்தில் இருந்து மூன்று லாரிகளில் அனுப்பி வைத்தார்.

1500 மூட்டை அரிசி மூன்று லாரிகளில் சுமார் 1500 மூட்டை அரிசி, 200 மூட்டை கோதுமை மாவு, 100 மூட்டை பருப்பு , மளிகை சாமான்கள், மைதா, மளிகை சாமான்கள் மற்றும் பால் பவுடர், பெட்சீட், துணிமணிகள், மருந்து பொருட்கள், காய்கறிகள் என மக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் மூன்று லாரிகளில் அனுப்பி வைத்தார்கள்.

50 ஆயிரம் மரக்கன்றுகள் :

அது மட்டுமல்லாமல் பாதிப்படைந்த பகுதிகளில் தன்னார்வலர்களுடன் வரும் சனி, ஞாயிறுகளில் மரங்கள் நடவுள்ளனர்.

இது பற்றி பி.டி.செல்வகுமார் கூறும் போது, இனி வரும் காலங்களில் அரசை மட்டுமே நம்பாமல் தன்னார்வத்தோடு களத்தில் இறங்கி போராடினால் தான் தீர்வு கிடைக்கும்.நமக்குள் எத்தனையோ நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் ஓன்றுபட்டு ஊழல் அரசியல்வாதிகளை துரத்தும் நேரம் வந்துவிட்டது.

அரசுக்கு கோரிக்கை : 

வெறுமனே நிவாரணமும், இழப்பீடும் மட்டுமே வழங்கி விடாமல் இழந்து பாலைவ னமாய் காட்சியளிக்கும் டெல்டா பகுதிகளுக்கு மீண்டும் லட்சக்கணக்கான தென்னைகளையும், மா, கொய்யா, தேக்கு, பூவரசு, போன்ற மரங்களையும், உடனே நட்டு, இந்த பகுதிகளை பசுமை பூமியாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மரங்களை பராமரிக்க பணியாளர்களையும் அமர்த்த வேண்டும். அப்போது தான் மக்கள் நல்ல காற்றை சுவாசிக்க முடியும். இவ்வாறு பி.டி.செல்வகுமார் கூறினார்.

T.ராஜேந்தர் : 

இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக T.ராஜேந்தர் கலந்து கொண்டார். இந்த தன்னார்வ தொண்டில் கலப்பை மக்கள் இயக்கத்தோடு இறங்கி பணியாற்றிய நண்பர் நந்தகுமார், V.K. வெங்கடேஷ்,மது, தனசேகர் மற்றும் உதவிகள் புரிந்த தாயாரிப்பாளர்கள் லலித்குமார்,

T.D. ராஜா, பைவ் ஸ்டார் செந்தில், காஞ்சி ரஜினி மன்ற செயலாளர் ஜெய்கிருஷ்ணன், திரைப்பட நடிகர் கதிர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், சிற்பி, இயக்குனர் மனோஜ்குமார், மணிலால், லயன் சாந்தா சண்முகம், லீ பேலஸ் கார்த்திக் அனைவரையும் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்.

ஒக்கி புயலின் போது குமரி மாவட்டத்தில் ஐம்பதாயிரம் மரங்களை நட்டு குமரி மாவட்ட மக்களிடம் பாராட்டை பெற்ற பி.டி.செல்வகுமார் 108 ஏழை விதவை பெண்களுக்கு ஆட்டுக்குட்டிகள் வழங்கியதும் எல்லாராலும் பாராட்டப்பட்டது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.