kalakkal-Reward Mass Hero 2018

Mass Hero 2018 : #KalakkalCinemaReward என்ற பெயரில் 2018-ன் மாஸ் ஹீரோ யார் என்று நடத்தப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது தெரிய வந்துள்ளன.

எங்களது சமூக வளையதள பக்கத்தில் 2018-ம் ஆண்டிற்கான மிக சிறந்த மாஸ் ஹீரோ யார் என்ற கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

இந்த கருத்து கணிப்பில் ரஜினி, கமல், விஜய், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்று இருந்தன.

முதல் நாள் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் ரஜினி, கமல், விஜய், விக்ரம் ஆகியோர் இடம் பெற்றனர். இதில் அதிக ஓட்டுகள் பெற்ற இருவர் ( ரஜினி, விஜய் ) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இரண்டாம் நாளில் சூர்யா, சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றது. இதில் இருந்து அதிக ஓட்டுகள் பெற்ற இருவர் ( சூர்யா, தனுஷ் ) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இறுதி கட்ட ஓட்டெடுப்பாக விஜய், ரஜினி, சூர்யா, தனுஷ் ஆகியோரின் பெயர்களுடன் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

இந்த கருத்து கணிப்பில் தளபதி விஜய் 56 % ஓட்டுகளுடன் முதல் இடத்தையும் சூர்யா மற்றும் ரஜினி 16 % ஓட்டுகளுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர். தனுஷ் 12 % ஓட்டுகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார்.

கருத்து கணிப்பு முடிவுகளின் முழு விவரம் இதோ :

முதல் கட்ட கருத்து கணிப்பு முடிவு :

இரண்டாம் கட்ட கருத்து கணிப்பு முடிவு :

இறுதிக்கட்ட கருத்து கணிப்பு முடிவு :

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.