Kalaipuli Thanu About Thuppaki Movie

துப்பாக்கி படத்தில் ஏற்பட்ட கூடுதல் செலவை திருப்பிக் கொடுத்து உள்ளார் தளபதி விஜய்.

Kalaipuli Thanu About Thuppaki Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் முதல் முறையாக 100 கோடி வசூலை பெற்ற திரைப்படம் துப்பாக்கி. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து இருந்தார்.

துப்பாக்கி படத்தில் ஏற்பட்ட கூடுதல் செலவு.. தயாரிப்பாளருக்கு பணத்தை திருப்பிக் கொடுத்த விஜய் - முதன்முறையாக வெளியான தகவல்
விரைவில் போக்குவரத்துக்கு அனுமதி : முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

இந்தப் படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவே என்ற பாடலை ஷூட் செய்து முடிக்க ரூபாய் 80 லட்சம் ஆகும் என கணக்கிடப்பட்டு இருந்த நிலையில் எதிர்பாராத சூழ்நிலையால் ரூபாய் 1.45 கோடியாக உயர்ந்தது. இதனை அறிந்த தளபதி விஜய் தன்னுடைய உதவியாளரிடம் கூறி கூடுதலாக ஆன செலவை தயாரிப்பாளரிடம் திருப்பிக் கொடுக்க கூறியுள்ளார்.

Cook with Comali Season 3-க்கு முன்பே தரமான இன்னொரு Show – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! | Cinema News

இந்த தகவலை படத்தை தயாரித்த கலைப்புலி எஸ் தாணு கூறியுள்ளார். தளபதி விஜய் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.