பொன்னியின் செல்வன் படத்துக்கு போட்டியாக நானே வருவேன் திரைப்படத்தை வெளியிடுவது ஏன் என பேசி உள்ளார் தயாரிப்பாளர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள நானே வருவேன் திரைப்படம் வரும் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாக உள்ளது. தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க செல்வராகவன் படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் வில்லனாகவும் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்துக்கு போட்டியாக நானே வருவேன் படத்தை வெளியிடுவது ஏன்? தயாரிப்பாளர் கொடுத்த விளக்கம்

மணிரத்தினம் இயக்கத்தில் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்துக்கு போட்டியாக இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு.

அதாவது எங்களுக்கும் பொன்னியின் செல்வன் படக்குழுவுக்கும் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. நானே வருவேன் படத்தின் ரிலீஸ் தேதி பல மாதங்களுக்கு முன்பே உறுதி செய்யப்பட்ட ஒன்று. என்னுடைய தயாரிப்பில் வெளியான அசுரன் போன்ற படங்களை இதே ஆயுத பூஜை சிறப்பு வெளியீடாக தான் வெளியிட்டோம். ஒன்பது நாள் விடுமுறையை மிஸ் செய்யக்கூடாது என்பதற்காகவே தான் இந்த படத்தையும் அதே பாணியில் வெளியிடுகிறோம் என தெரிவித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்துக்கு போட்டியாக நானே வருவேன் படத்தை வெளியிடுவது ஏன்? தயாரிப்பாளர் கொடுத்த விளக்கம்

மேலும் உலகம் முழுவதும் உள்ள எல்லோரும் ஒரே மாதிரியாக நிம்மதியாக படம் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் 8 மணிக்கு படத்தை வெளியிடுகிறோம். நான்கு மணிக்கு ரிலீஸ் செய்து இளைஞர்கள் அவசர அவசரமாக வந்து படம் பார்க்க கூடாது என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.