240 நாடுகளில் மகான் திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Kalaignar Tv Bagged Mahaan Satelite Rights : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரும் இவருடைய மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் மகான்.

240 நாடுகளில் வெளியாகும் மகான்.. சாட்டிலைட் உரிமையை வாங்கியது யார் தெரியுமா? முழு விவரம் இதோ

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் நாளை அமேசான் பிரைம் வீடியோ வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் 240 நாடுகளில் மகான் திரைப்படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

240 நாடுகளில் வெளியாகும் மகான்.. சாட்டிலைட் உரிமையை வாங்கியது யார் தெரியுமா? முழு விவரம் இதோ

இந்தியில் கோல்ட் மைன் என்ற தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் சோனி மியூசிக் நிறுவனம் இசை உரிமையை கைப்பற்றி உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.