உதயநிதி மற்றும் மகிழ் திருமேனியின் கலகத்தலைவன் படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் பல ஆக்ஷன் த்ரில்லர் படங்களை இயக்கி வெற்றி கண்ட மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆரவ், நிதி அகர்வால் உட்பட பலரது நடிப்பில் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது.

உதயநிதி, மகிழ் திருமேனி கூட்டணி ஜெயிக்குமா? கலகத்தலைவன் விமர்சனம் இதோ.!!

படத்தின் கதைக்களம் :

ட்ருபேடார் என்ற கார்பரேட் நிறுவனம் சறுக்கத்தில் இருந்து மீள புதுவகை பைக் ஒன்றை அறிமுகம் செய்கிறது. அதாவது குறைந்த அளவிலான பெட்ரோலில் அதிக மைலேஜ் தரும் வகையில் அந்த வண்டியை வடிவமைக்கிறது. ஆனால் இந்த வண்டியில் இருந்து வெளி வரும் புகை மிகவும் ஆபத்தான ஒன்று என்பது அந்த நிறுவனத்துக்கே லேட்டாக தான் தெரிய வருகிறது. ஆனால் இந்த விஷயத்தை முடி மறைக்க அந்நிறுவனத்தின் உரிமையாளர் முயற்சி செய்ய எதிர்பாராத விதமாக இந்த விஷயம் எதிரி மோட்டார் கம்பெனிக்கு தெரிய வர இந்த விஷயம் வெளியேவும் கசிந்து விட நிறுவனம் நஷ்டத்தையும் விமர்சனங்களையும் சந்திக்கிறது.

இதனால் ட்ருபேடார் நிறுவன உரிமையாளர் ஆரவ் மூலம் இந்த ரகசியத்தை கசிய விட்டது யார் என கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். ஆரவ் தீவிரமாக வேட்டை நடத்தி உண்மைகளை வெளியே கொண்டு வந்தாரா? இதற்கும் உதயநிதிக்கும் என்ன சம்பந்தம்? என்பது தான் இந்த படத்தின் கதைக்களம்.

உதயநிதி, மகிழ் திருமேனி கூட்டணி ஜெயிக்குமா? கலகத்தலைவன் விமர்சனம் இதோ.!!

படத்தை பற்றிய அலசல் :

உதயநிதி ஸ்டாலின் எதார்த்தமான நடிப்பை, அதிரடியான ஆக்ஷன்களையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆரவ் மிரட்டலான நடிப்பை கொடுத்து படத்திற்கு பலமாக அமைந்துள்ளார். ஶ்ரீகாந்த் தேவா பின்னணி இசை காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது. ஆனாலும் பாடல்கள் சுமார் ரகம்.

அழகான ஒளிப்பதிவு, கச்சிதமான எடிட்டிங் என அனைத்தும் படத்துக்கு பக்கபலமாக இருக்கிறது.

தம்ப்ஸ் அப் :

1. உதயநிதி, ஆரவ் நடிப்பு

2. இசை, ஒளிப்பதிவு

3. மகிழ் திருமேனி இயக்கம்

தம்ப்ஸ் டவுன் :

1. வழக்கமான சில லாஜிக்கல் தவறுகள்