Kajol Daughter

Kajol Daughter : 16 வயது மட்டுமே ஆன நிலையில் தன்னுடைய மகள் நாயகியாக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாக அதற்கு விளக்கமளித்துள்ளார் கஜோல்.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கஜோல். தமிழ் சினிமாவிலும் சில படங்களில் நடித்திருந்த இவர் வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் மூலம் தமிழில் ரி-என்ட்ரி கொடுத்திருந்தார்.

“குழந்தை உதைக்குது பாருங்கோ” – வைரலாகும் எமி ஜாக்சனின் கடற்கரை வீடியோ!

இவருடைய மகள் நைஜா தற்போது 10-ம் வகுப்பு படித்து வருகிறார். 16 வயது மட்டுமே ஆகிறது. இந்நிலையில் இவர் நாயகியாக அறிமுகமாக இருப்பதாக சமீபத்தில் தகவல் பரவியது.

இதனையடுத்து கஜோல் தன்னுடைய மகளுக்கு 16 வயது தான் ஆகிறது. அவளை கொஞ்சம் பிரீயாக விடுங்கள்.

அவள் 10-ம் வகுப்பு தேர்விற்காக தயாராகி வருகிறார் என கூறி இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.