Kajol Daughter in Sivakarthikeyan Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், தனது அடுத்த படமாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் டாக்டர் என்ற படத்தை தேர்வு செய்துள்ளார். இந்த படத்தில் பிரபல இந்தி நடிகை கஜோலின் மகள் நடிப்பதாக வந்துள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் படத்தில் கதாநாயகியாக பிரியங்கா நடிக்கிறார்.
Copy linkஅடேங்கப்பா எத்தனை?? கெட்டவன் முதல் மகா மாநாடு வரை – சப்தமில்லாமல் ட்ராப்பான சிம்புவின் படங்கள்.!!
பக்கா ஆக்ஷன் காமெடி கதையை கொண்ட இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்தப்படத்தில் அண்மையில் வெளியான ‘செல்லம்மா’ என்ற பாடலுக்கு யூடியூபில் மூலம் பல ரசிகர்கள் ஆதரவு கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் இந்தப் படத்தில் பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன், நடிகை கஜோல் தம்பதியின் மகள் நைசா தேவ்கன் நடிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து இப்படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கூறியதாவது: சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தில் அவர் நடிக்கவில்லை, இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் கூடிய விரைவில் படம் வெளியாகும் என்றும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.