நடிகை காஜல் அகர்வால் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்திருக்கும் தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக இணைந்து நடித்து டாப் ஹீரோயினியாக வலம் வரும் இவர் மும்பை தொழிலதிபர் கௌதம் கிச்சுலு என்பவரை 2020ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கடந்த ஆண்டு அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்த காஜல் அகர்வால் அக்குழந்தைக்கு நீல் கிச்சுலு என்னும் பெயரை வைத்திருந்தார்.

குழந்தையை பெற்றெடுத்த சில மாதங்களிலேயே மீண்டும் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் காஜல் அகர்வால் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கும் நெகிழ்ச்சியான தகவல் விஜய் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்து வைரலாகி வருகிறது.

அதில் அவர், “எனது மகன் நீல்-க்கு 8 வயது ஆகும் வரை அவனை எந்த படமும் பார்க்க விட மாட்டேன், அவனுக்கு 8 வயது ஆனவுடன், முதலில் நான் துப்பாக்கி படத்தை தான் காட்டுவேன் எனக் கூறியிருக்கிறார்”. காஜல் அகர்வாலின் இந்த நெகிழ்ச்சியான அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இதனை வைரலாக்கி வருகின்றனர்.